Sunday, January 31, 2010

கப்ர் வழிபாடு


நல்லடியார்களின் கப்ர்களிலும், அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பல செயல்கள் நடக்கின்றன. அவற்றில் ஓரிறைக் கொள்கைக்கு முரணான சிலசெயல்களும் அவை தவறு என்பதற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) சிலர், இறந்துவிட்ட நபிமார்களிடமும் நல்லடியார்களிடமும் -அவ்லியாக்களிடமும்- தங்களின் தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர், பரிந்துரைக்க வேண்டுகின்றனர். துன்பங்களை நீக்கக் கோருகின்றனர், அவர்களிடம் உதவி, அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடுகின்றனர்.
பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!. அவனுக்கே உரிய இவ்வணக்கத்தை பிறருக்குச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ

(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِ

துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)

2) சிலர், சில பெரியார்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயர்களை நிற்கும் போதும், உட்காரும் போதும், கஷ்டத்தின் போதும் கூறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் ஒருவர்: யா முஹம்மத்! என்கிறார். மற்றொருவர்: யா அலீ! என்கிறார். மற்றொருவர்: யா ஹுஸைன்! என்கிறார். அவர்: யா பதவீ! என்கிறார். இவர்: யா ஜீலானி! யா முஹைதீன்! என்கிறார். அவர்: யா ஷாதலீ! என்கிறார். இவர்: யா ரிஃபாயீ! என்கிறார். அவர் ஐதுரூஸை அழைக்கிறார். இவர் ஸெய்யிதா ஜைனபை அழைக்கிறார். மற்றொருவர் இப்னு அல்வானை அழைக்கிறார்.

அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)

3) கப்ரை வழிபடும் சிலர் அதனை வலம் வருகிறார்கள். அதன் மூலைகளை கையால் பூசி அதனை உடலில் தடவிக் கொள்கிறார்கள். அதன் மணலை முத்தமிடுகிறார்கள். முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். கப்ர்களைக் கண்டால் உடனே ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். மேலும் கப்ர்களுக்கு முன்னால் மிகவும் பயபக்தியுடனும் பணிவுடனும் சிரம் தாழ்ந்தவர்களாக, அச்ச உணர்வுடன் நின்று கொண்டு, நோயை நீக்க, குழந்தை கிடைக்க, தேவைகள் நிறைவேற மற்றும் இதுபோன்ற தன் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். என்னுடைய தலைவரே! நெடுந்தூரம் பயணம் செய்து உங்களிடம் வந்துள்ளேன். எனவே என்னை நஷ்டமடைந்தவனாக வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிடாதீர்! என்றுகூட சிலர் வேண்டுகிறார்கள். ஆனால்

அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)

4) சிலர் கப்ர்களுக்கு சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர். சிலர் கப்ர்களின் கண் கொள்ளாக்காட்சி, அவ்லியாக்களின் அபரிமித ஆற்றல் என்றெல்லாம் பல தலைப்புக்களில் கட்டுக் கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்கு மனாஸிக் ஹஜ்ஜில் மஷாஹித் -கண்கூடான ஹஜ் வழிபாடு- என்றும் பெயர் சூட்டியுள்ளனர். சிலர் அவ்லியாக்கள்தான் இவ்வுலகில் ஆட்சி செய்கிறார்கள் என்றும் துன்பம் தரவும் இன்பம் தரவும் அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)

Thursday, January 28, 2010

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

                                         கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!

இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்  என்பதற்காகஅன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.
1. தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)                      ஆதாரம்: புகாரி6325, 6324, 6314

2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.  
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி.                             ஆதாரம்: புகாரி 6322
பொருள் :
இறைவா! ஆண்பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:
غُفْرَانَكَ
ஃகுப்(எ)ரான(க்)க
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.                 ஆதாரம்: திர்மிதீ 7
5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
ஆதாரம்: நஸயீ 5391, 5444
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும்வழி தவறி விடாமலும்அநீதி இழைக்காமலும்அநீதி இழைக்கப்படாமலும்மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. 
ஆதாரம்: முஸ்லிம் 1165
7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.                        ஆதாரம்: முஸ்லிம் 345
9. பாங்கு சப்தம் கேட்டால்
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.      ஆதாரம்:புகாரி 611
பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும்நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும்சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614, 4719
10. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.        ஆதாரம்: முஸ்லிம் 1165
11. சாப்பிடும் போதும்பருகும் போதும் ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.       ஆதாரம்: புகாரி 5376, 5378
12. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி    எனக் கூற வேண்டும்.           ஆதாரம்: திர்மிதீ 1781
13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.               ஆதாரம்: முஸ்லிம் 4915
14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
15. பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹுஅல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி      எனக் கூறுவார்கள்.
பொருள் :
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும்இறையச்சத்தையும்நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும்மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.   
                  ஆதாரம்: முஸ்லிம் 2392
16. பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
பொருள் :
எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும்புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392

17. தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ்       எனக் கூற வேண்டும்.
பொருள் :
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்  கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
யர்ஹமு(க்)கல்லாஹ்  எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்
எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224
18. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்யவஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ  ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன்.. எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.                            ஆதாரம்: புகாரி 6306