Wednesday, December 30, 2009

மனைவி

இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீநூல்: முஸ்லிம் 2915

    உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

    பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக் கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: முஸ்லிம் 2913

    ''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலிநூல்: புகாரி 56
 
    ''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலிநூல்: புகாரி 5204

    ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி)  நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

    ''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: திர்மதி 1082

    ''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ)  நூல்: அபூதாவூத் 1442

     உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்  (ரலீ)  நூல்: புகாரீ 5200

    நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்அறிவிப்பாளர்: அனஸ்  (ரலீ) நூல்: புகாரீ 2481
 
     ''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்  நூல்: முஸ்லிம் 2911


Thanks: http://www.readislam.net 

Tuesday, December 29, 2009

ஒற்றுமை


بسم الله الرحمن الرحيم

ஒற்றுமை


அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

எங்க அப்பாவ காப்பாத்துங்க !

என் கணவன காப்பாத்துங்க !

என் புள்ளைய காப்பாத்துங்க !

உங்கள் காதில் விழுகிறதா! தங்கள் சொந்தத்தை இழ்தவர்களின் குமுறல்கள்.

மனைவி, மக்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் நாம் சந்தோஷமாக வாழ்கிறோம். சாப்பட்டிற்கு வழி இல்லாதவர்களும் தம் குடும்பத்தாரை கண்டு பேசி மகிழக்கூடிய வாய்ப்பாவது இறையருளால் கிடைக்கின்றது. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தம் சொந்தங்களுடன் பேசி மனதை தேத்தக்கூடிய வாய்ப்பாவது கிடைக்கின்றது.

ஆனால் ???

இந்த வாய்ப்புகள், இந்த பாக்கியங்கள் ஒன்றுமே இல்லாமல் வாழ்கிறார்களே, அந்த பரிதாப உள்ளங்கள் கதறக்கூடிய சொந்தம் யார் என்று தெரியுமா ?

அவர்கள் தான், குற்றம் செய்யாமல் கைதி செய்யப்பட்டு, விசாரனையில்லாமல் சிறையிலடைக்கப்பட்டு, தங்கள் இளமையை இழந்து, பெற்ற தாய் தந்தையை இழந்து, தங்கள் அன்பிற்கினிய மனைவியை இழந்து, பெற்றெடுத்த பிள்ளைகளை இழந்து, காரணமே இல்லாமல், எதிர்காலமே தெரியாமல், உலகத்தைப்பற்றியே அறியாமல், ஓர் இருட்டறைக்குள் வாழ்கிறார்களேஅப்பாவி சிறைவாசிகள். இவர்கள் தான் பல உள்ளங்களால் ஏங்கப்படக்கூடிய அந்த சொந்தம்.

இவர்களுக்கு உதவுவதற்கு அல்லாஹ் இருக்கிறான். நிச்சயமாக அவன் மூஃமின்களை கைவிடமாட்டான். ஆனால் இவர்கள் விஷயத்தில் நீங்கள்.....

உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

இஸ்லாமிய அமைப்புகள் முயற்சியே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை,

செய்த முயற்சிகள் பிரிந்து பிரிந்து

செய்து பாருங்கள் ஒன்றினைந்து.

பல ஜமாஅத்துகளாக, பல இயக்கங்களாக, பல கழகங்களாக பிரிந்துகிடக்கக்கூடிய எனது முஸ்லிம் சமுதாயமே !

நீ விரும்பிய இஸ்லாமிய அமைப்புகளில் இருந்துக்கொள், விரும்பிய தலைமையை பின்பற்றக்கொள், காரணம்  உனது ஆர்வம், உனத அறிவு.

ஆனால் நீ விருமபந்தகுந்த முஸ்லிமை மறந்துவிடாதே, காரணம் நீ ஏற்றிருக்க்கூடிய மார்க்கம்,பிரிந்து கிடப்பவர்களை இறை உவப்பை சொல்லி ஒன்றினைக்கக்கூடிய இஸ்லாம்.

கருத்து வேறுபாடு காரணமாகத்தான் பிரிவு. ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பல விஷயங்களில் பிரிய வேண்டாம். நாம் பிரிந்து தனித்தனியே முயற்சிப்பதால் பலனில்லா பயணமாகிவிடும்.

நீங்கள் பிரிந்து பிரிந்து செய்யக்கூடிய ஆர்ப்பாட்டங்களை விட ஓரணியில் சேர்ந்து ஒரு தடவையாவது முயற்சி செய்து பாருங்கள் அல்லாஹ்விற்காக.

ஓன்றினைந்து போராடுவோம்  -  இறை உதவியை பெற்றிடுவோம்.


(குறிப்பு : அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த மெயில் தமிழகத்திலுள்ள நானறிந்த எல்லா இஸ்லாமிய அமைப்புகளுக்கு செல்கின்றது. காரணம் பெருமைக்காக அல்ல, என்னால் முடிந்தளவிற்கு முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு முயற்சிக்கிறேன். இது போல் சமுதாய ஒற்றுமைக்கு முயற்சி செய்யும் சகோதரர்கள் அனைவரின் முயற்சியையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள அல்லாஹ்விடத்தில் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)




GAZY...

Thursday, December 17, 2009

VERY SHORT, MOST EFFECTIVE AND HOW TRUE...


30 second Speech by Bryan Dyson (CEO of Coca Cola)


"Imagine life as a game in which you are juggling some five balls in the air. You name them - Work, Family, Health, Friends and Spirit and you're keeping all of these in the Air.


You will soon understand that work is a rubber ball. If you drop it, it will bounce back.


But the other four Balls - Family, Health, Friends and Spirit - are made of glass. If you drop one of these; they will be irrevocably scuffed, marked, nicked, damaged or even shattered. They will never be the same. You must understand that and strive for it."

WORK EFFICIENTLY DURING OFFICE HOURS AND LEAVE ON TIME. GIVE THE REQUIRED TIME TO YOUR FAMILY, FRIENDS & HAVE PROPER REST.


Tuesday, December 15, 2009

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா இலவச தரவிறக்கம்




மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆபீஸ் மென்பொருளின் புதிய 2010 பதிப்பிற்கான பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் ப்ரொபசனல் பிளஸ் என்ற இந்த பதிப்பு வோர்ட், பவர்பாய்ன்ட், எக்ஸ்செல், இன்போபாத், அக்சஸ், அவுட்லுக், பப்ளிஷர், ஒன் நோட், ஷேர்பாயின்ட் போன்றவற்றை கொண்டுள்ளது.



இதனை நீங்கள் இலவசமாக தரவிறக்கி சோதித்து பார்த்து கொள்ளலாம். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் லைவ் அல்லது ஹொட்மெயில் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள். 



இதனை ISO கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம். இதன் அளவு 684MB.




இதனை அக்டோபர் 2010 வரை இலவசமாக உபயோகித்து பார்த்து கொள்ளலாம். அதன் பின்பு காலாவதி ஆகி விடும்.


Courtesy: Http://www.tvs50.blogspot.com 

Sunday, December 13, 2009

நபிமொழி

நபிமொழி


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி :

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(புகாரி,முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)

(அபூயஹ்யா என்ற)ஸூஹைப் இப்னு ஸினான்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'ஒரு மூஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு மூஃமினை தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது. அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால், பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றது' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 27)

அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் (புகாரி).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39)

அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 40)

நபிமொழி :

அல்அஹர்ரு இப்னு யஸார் முஸனிய்யி (ரலி) அறிவிக்கின்றார்கள்:

'மனிதர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறுமுறை பாவமன்னிப்பு(தவ்பாச்)செய்கிறேன் ' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 14)

அபூ ஹம்ஸா என்ற அனஸ் இப்னு மாலிக் அல்அன்சாரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்:

' பாலைவனத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தை மீண்டும் பெற்றுவிட்டதால், அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது, அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 15)

 
அபூஹூரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

'மூஃமினான எனது அடியானுக்கு உலக மக்களில் விருப்பமானவரை நான் கைப்பற்றி. பின்பு அவன் (பொறுமையாக இருந்து) நல்லதை எதிர் பார்த்திருந்தால், அவனுக்கு என்னிடம் கூலி, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை' என்று அல்லாஹ்; கூறுவதாக' நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி).

( ரியாளுஸ்ஸாலிஹீன்: 32)

அபூஸயீத்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்:

'ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். '(புகாரி, முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)
நபிமொழி : 

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:

'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டார். 'கோபம் கொள்ளாதே என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். கோபம் கொள்ளாதே' என்றே நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 48)

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:

'ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.'' என நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ).
 ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 49)
இப்னு மஸ்ஊத்(ரலி)அறிவிக்கின்றார்கள்:

''எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன?' என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.'' (புகாரி,முஸ்லிம்).
 ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 51)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)



'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

Pls dont 4get me in ur duas

GAZALI...

Sunday, December 06, 2009

வாழ்க்கைத் துணைவி

வாழ்க்கைத் துணைவி

உங்கள் வாழ்க்கைத் துணைவி


هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن


‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).




திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்!நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .



அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.



நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.



உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.



உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.



சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.



ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!



கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!



“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).



எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.



இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.



இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது



وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا



மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)



அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:



وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ



மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).



ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.



நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.

திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.



பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.



மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.



நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:



அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.



ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?



அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.



எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.



உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.



இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.

விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.



நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.

சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:



ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ



நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).



இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:



இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.



தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.



அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு