بسم الله الرحمن الرحيم
ஒற்றுமை
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எங்க அப்பாவ காப்பாத்துங்க !
என் கணவன காப்பாத்துங்க !
என் புள்ளைய காப்பாத்துங்க !
உங்கள் காதில் விழுகிறதா! தங்கள் சொந்தத்தை இழ்தவர்களின் குமுறல்கள்.
மனைவி, மக்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் நாம் சந்தோஷமாக வாழ்கிறோம். சாப்பட்டிற்கு வழி இல்லாதவர்களும் தம் குடும்பத்தாரை கண்டு பேசி மகிழக்கூடிய வாய்ப்பாவது இறையருளால் கிடைக்கின்றது. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தம் சொந்தங்களுடன் பேசி மனதை தேத்தக்கூடிய வாய்ப்பாவது கிடைக்கின்றது.
ஆனால் ???
இந்த வாய்ப்புகள், இந்த பாக்கியங்கள் ஒன்றுமே இல்லாமல் வாழ்கிறார்களே, அந்த பரிதாப உள்ளங்கள் கதறக்கூடிய சொந்தம் யார் என்று தெரியுமா ?
அவர்கள் தான், குற்றம் செய்யாமல் கைதி செய்யப்பட்டு, விசாரனையில்லாமல் சிறையிலடைக்கப்பட்டு, தங்கள் இளமையை இழந்து, பெற்ற தாய் தந்தையை இழந்து, தங்கள் அன்பிற்கினிய மனைவியை இழந்து, பெற்றெடுத்த பிள்ளைகளை இழந்து, காரணமே இல்லாமல், எதிர்காலமே தெரியாமல், உலகத்தைப்பற்றியே அறியாமல், ஓர் இருட்டறைக்குள் வாழ்கிறார்களேஅப்பாவி சிறைவாசிகள். இவர்கள் தான் பல உள்ளங்களால் ஏங்கப்படக்கூடிய அந்த சொந்தம்.
இவர்களுக்கு உதவுவதற்கு அல்லாஹ் இருக்கிறான். நிச்சயமாக அவன் மூஃமின்களை கைவிடமாட்டான். ஆனால் இவர்கள் விஷயத்தில் நீங்கள்.....
உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
இஸ்லாமிய அமைப்புகள் முயற்சியே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை,
செய்த முயற்சிகள் பிரிந்து பிரிந்து
செய்து பாருங்கள் ஒன்றினைந்து.
பல ஜமாஅத்துகளாக, பல இயக்கங்களாக, பல கழகங்களாக பிரிந்துகிடக்கக்கூடிய எனது முஸ்லிம் சமுதாயமே !
நீ விரும்பிய இஸ்லாமிய அமைப்புகளில் இருந்துக்கொள், விரும்பிய தலைமையை பின்பற்றக்கொள், காரணம் உனது ஆர்வம், உனத அறிவு.
ஆனால் நீ விருமபந்தகுந்த முஸ்லிமை மறந்துவிடாதே, காரணம் நீ ஏற்றிருக்க்கூடிய மார்க்கம்,பிரிந்து கிடப்பவர்களை இறை உவப்பை சொல்லி ஒன்றினைக்கக்கூடிய இஸ்லாம்.
கருத்து வேறுபாடு காரணமாகத்தான் பிரிவு. ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பல விஷயங்களில் பிரிய வேண்டாம். நாம் பிரிந்து தனித்தனியே முயற்சிப்பதால் பலனில்லா பயணமாகிவிடும்.
நீங்கள் பிரிந்து பிரிந்து செய்யக்கூடிய ஆர்ப்பாட்டங்களை விட ஓரணியில் சேர்ந்து ஒரு தடவையாவது முயற்சி செய்து பாருங்கள் அல்லாஹ்விற்காக.
ஓன்றினைந்து போராடுவோம் - இறை உதவியை பெற்றிடுவோம்.
(குறிப்பு : அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த மெயில் தமிழகத்திலுள்ள நானறிந்த எல்லா இஸ்லாமிய அமைப்புகளுக்கு செல்கின்றது. காரணம் பெருமைக்காக அல்ல, என்னால் முடிந்தளவிற்கு முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு முயற்சிக்கிறேன். இது போல் சமுதாய ஒற்றுமைக்கு முயற்சி செய்யும் சகோதரர்கள் அனைவரின் முயற்சியையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள அல்லாஹ்விடத்தில் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
Thanks: message-from-islam@ googlegroups.com.
GAZY...
No comments:
Post a Comment